மைதானத்தின் குப்பைகளை அகற்றிய ஜப்பான் ரசிகர்கள்… வைரல் ஆகும் புகைப்படங்கள்!

வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:56 IST)
சமீபத்தில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை பொட்டியில் ஜப்பான் அணி, ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படாத முடிவைக் கொண்ட ஆட்டமாக ஜெர்மனி மற்றும் ஜப்பான அணிகளுக்கு இடையேயான போட்டியை சொல்லலாம். கோப்பையை வெல்லும் எனக் கணிக்கப்படும் ஒன்றிரண்டு அணிகளில் ஜெர்மனியும் ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஜெர்மனி அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது ஜப்பான்.

ஜப்பான் வீரர்கள் களத்தில் ஆச்சர்யம் அளிக்க, ஜப்பான் ரசிகர்களும் ரசிகர்களின் இதயங்களைக் கவரும் விதமாக நடந்துகொண்டனர். போட்டி முடிந்ததும் ரசிகர்கள் விட்டு சென்ற குப்பைகளை அவர்கள் சேகரித்து அங்கிருந்து அகற்றினர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்