லியாண்டர் பயஸ் இளம் வீராங்கனையுடன் காதல்?

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:19 IST)
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் தற்போது இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவருடம் சேர்த்து கிசுகிசுக்கப்படுகிறார்.


 
 
நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி ரியா பிள்ளையை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் லியாண்டர் பயஸ். சில வருடங்களுக்கு முன்னர் தனது மகள் அயினாவுக்கு உரிமை கோரி மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி ரியா மீது வழக்கு தொடர்ந்தார்.
 
இதனால் ரியாவுக்கும் லியாண்டர் பயசுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இளம் டென்னிஸ் வீராங்கனை தன்வி ஷா மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
தன்வி மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை. விரைவில் இந்த கிசுகிசு குறித்து லியாண்டர் பயஸ் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்