ஐபிஎல் தொடரில் முதல் முறையாக… ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்!

புதன், 29 செப்டம்பர் 2021 (11:35 IST)
ஐபிஎல் தொடரில் கடைசி இரு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இப்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் இரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் நடக்கும் போட்டிகளுக்கு தொலைக்காட்சியில் பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் நடக்கும் இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரு போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்