டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த விராத் கோஹ்லி

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (19:13 IST)
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த விராத் கோஹ்லி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இன்று முதல் நடைபெற உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
ன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் மும்பை மற்றும் பெங்களூர் அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
மும்பை: ரோஹித் சர்மா, கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, மார்கோ ஜென்சன், ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், பும்ரா
 
 
பெங்களூர்: விராத் கோஹ்லி, ரஜத் படிடார், டிவில்லியர்ஸ், மாக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டெல், சிராஜ், சாஹல்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்