அதனையடுத்து முதல் நான்கு இடங்கள் பெற்ற அணிகள் குவாலிஃபயருக்கு தகுதி பெறும். முதலாம் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் மோதும் குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். 3ஆம், 4ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபயரில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்
இந்த நிலையில் முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது