ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:23 IST)
ஹர்திக் பாண்ட்யாவின் மனைவி நடாஷா வெளியிட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களது திருமணம் ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப் போனது .

திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தனது காதல் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து வந்தார் ஹர்திக் பாண்ட்யா.

இந்நிலையில் சில நாட்களுக்கு  முன்னார் பாண்ட்யாவின் மனைவி நடாஷா தனது கணவரை முத்தமிட்டுக் கொண்டு இருப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஆனால் அதை இன்ஸ்டாகிராம் தங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று கூறி நீக்கி இருந்தது. பின்னர் அதே புகைப்படத்தை நடாஷா மீண்டும் பதிவேற்றிய போது அதை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்