ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

சனி, 23 பிப்ரவரி 2019 (08:20 IST)
கடந்த சில நாட்களாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய வீராங்கனைகள் முதலில் களமிறங்கினர். இந்திய மகளிர் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. ரோட்ரிகஸ் 48 ரன்களும், கேப்டன் மிதாலிராஜ் 44 ரன்களும், எடுத்தனர்
 
இந்த நிலையில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, 41 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
சீவன் 44 ரன்களும், கேப்டன் நைட் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பிஸ்ட் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஷர்மா மற்றும் பாண்டே  தலா 2 விக்கெட்டுக்களையும் கோஸ்வாமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 18 புள்ளிகள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்