டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் சோயிப் மாலிக் 78 ரன்களும், சர்ஃபாஸ் அகமது 44 ரன்களூம், ஃபக்கார் ஜமாம் 31 ரன்களும் அடித்ததால் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன் பின்னர் 238 ரன்கள் அடித்தால் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 210 ரன்கள் அடிக்கும் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. ரோஹித் சர்மா, தவான் ஆகிய இருவரும் 111 மற்றும் 114 ரன்கள் அடித்து சதமடித்தனர். இறுதியில் இந்திய அணி 39.3 ஒவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 100 பந்துகளில் 114 ரன்கள் அடித்த தவான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.