எனவே 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, 26 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோலி (52), தோனி (17) அவுட்டாகாமல் உள்ளனர்.
தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். தவிர, டி.ஆர்.எஸ்., முறைப்படி, இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.