170 ரன்கள் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிய விளையாடிய பாகிஸ்தானுக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ரன்னில் தொடக்க ஆட்டக்காரர் ஆயிஷா ஷாபர் அவுட் ஆனார். தொடர்ந்து இந்திய அணி வீராங்கனைகளின் பந்துவிச்சில் அனல் பறந்ததால் பாகிஸ்தான் அணி வெறும் 74 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி 4 வீராங்கனைகள் டக் அவுட் ஆனார்கள்.