2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த இந்தியா: 3வது நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர்!
புதன், 29 டிசம்பர் 2021 (07:20 IST)
2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த இந்தியா: 3வது நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் அடித்தது என்பதும் கேஎல் ராகுல் அபார சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இதனை அடுத்து 134 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது என்பதும் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நான்காவது நாளாக போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.