இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி அதிரடி முடிவு

வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:02 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி அதிரடி முடிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று ஆக்லாந்து மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
 
இதனை அடுத்து இந்திய அணி தற்போது களத்தில் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் தவான் அபாரமாக விளையாடி தலா 33 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பதும் இந்திய அணி சற்று முன் வரை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்