நாளை இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?
வியாழன், 24 நவம்பர் 2022 (16:42 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
டி 20 கிரிக்கெட் தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், நவம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.