திருச்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த அமைச்சர்!

வெள்ளி, 11 ஜூன் 2021 (11:59 IST)
திருச்சியில் சுகாதாரப் பணியாளர்கள் 3000 பேருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்களப் பணியாளர்களில் சுகாதாரப் பணியாளர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் விதமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என நேரு கலந்துகொண்டு பணியாளர்களுக்கு முட்டை வழங்கினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்