இதன்மூலம் இரு அணிகளும் 1-1- என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் பலமாக இருந்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஈஸியாக தோற்கடித்தது.
அதற்கு நேர்மாறாக 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும் பவுலிங்கும் செம சொதப்பல். அதேவேளையில் இங்கிலாந்து அணி ரூட் அபாரமாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். மேலும் வில்லே 50 ரன்களும், கேப்டன் மோர்கன் 53 ரன்களும் குவித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் ஒருவரும் 50 ரன்களை தாண்டவில்லை.