நேற்றைய இந்தியா - இந்தியா அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. ரூட் அபாரமாக விளையாடி 113 ரன்கள் குவித்தார். மேலும் வில்லே 50 ரன்களும், கேப்டன் மோர்கன் 53 ரன்களும், ராய் 40 ரன்களும் குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 322 ரன்கள் குவித்தது
323 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய கோலி 46 ரன்களும், ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினர். தோனி 37 ரன்னில் அவுட்டானார்.