ஆஸ்திரேலிய பவுலர்களை வச்சு செய்த புஜாரா: டிராவிட்டை மிஞ்சி அசத்தல்!!

ஞாயிறு, 19 மார்ச் 2017 (15:33 IST)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இரண்டாவது நாளாக புஜாரா நின்று ஆட இந்திய அணி முன்னிலை பெற்றது.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. 
 
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில், 451 ரன்கள் எடுத்தது. 
 
நான்காவது நாளாக, முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா நிற்க, ஆஸ்திரேலிய பவுலர்கள் கை வலிக்க வலிக்க பவுலிங் செய்தது மட்டுமே மிஞ்சியது.
 
ஒருவழியாக 521 வது பந்தில் புஜாரா தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். சுமார் 500 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட புஜாரா டெஸ்ட் அரங்கின் தூண் என கருதப்படும் டிராவிட் (495 பந்துகள்) சாதனை தகர்த்தார். 
 
தற்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்