தவான் விக்கெட்டும் விழுந்தது: 195 இலக்கை சேஸ் செய்யும இந்தியா?

ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (16:41 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. வேட் 58 ரன்களும் ஸ்மித் 46 ரன்களும் எடுத்துள்ளனர் இந்திய தரப்பில் நடராஜன் அபாரமாக பந்து வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் 195 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகின்றனர். ஏற்கனவே கேஎல் ராகுல் 30 ரன்களில் அவுட்டான நிலையில் சற்று 52 ரன்களில் தவான் அவுட்டானார். இதனையடுத்து தற்போது விராத் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்
 
தற்போது 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இன்னும் 48 பந்துகளில் 90 ரன்கள் எடுக்க வேண்டும். 195 என்ற இலக்கை இந்தியா எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்