இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதனால் 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்திய அணியின் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும், சயினி, தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்