கொரோனா வைரஸ் எதிரொலி: சீனர்களுக்கு விசாவை தடை செய்தது இந்தியா!

ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:00 IST)
கொரோனா வைரஸ் தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சீனர்கள் இந்தியா வருவதற்கு விசா தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த வுகான் பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வுகானுக்கு அருகே 100 கி.மீ தொலைவில் உள்ள பகுதியிலிருந்து வந்தவர். இதனால் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறதா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சீனர்கள் மற்றும் சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான இ-விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இந்தியா அரசு. மேலும் சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்டு வரும் பணிகளும் தொடர்ந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்