100 ரன்கள் இலக்கை கடைசி வரை கொண்டு சென்ற இந்திய அணி.. த்ரில் வெற்றி!
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (22:32 IST)
100 ரன்கள் இலக்கை கடைசி வரை கொண்டு சென்ற இந்திய அணி.. த்ரில் வெற்றி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 100 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கடைசி பந்து வரை கொண்டு சென்றது த்ரில்லாக இருந்தது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி நேரத்தில் 19.5 வது ஓவரில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.