இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா பேட்டிங்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:16 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா பேட்டிங்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது 
 
இலங்கை கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் இன்று முதலாவது டி20 போட்டி ஆரம்பமாகி உள்ளது. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது 
 
இதனால் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இஷான் கிஷான்  மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர் என்பதும் இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்