இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி ரத்து!!

ஞாயிறு, 25 ஜூன் 2017 (12:30 IST)
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. 


 
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் 3 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 
 
பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 194 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்குவதற்கு முன்பு மீண்டும் பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 
 
இவ்விறு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி இன்று  நடக்கிறது. இரு அணிகளிலும் பெரும்பாலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்