பலே...பலே...ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கம்...

புதன், 10 அக்டோபர் 2018 (16:22 IST)
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில்  மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி மூன்று தங்கம் வென்றுள்ளது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இந்தோனேஷியா சென்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை நன்கு வெளிக்காட்டி வருகின்றனர். 
 
இந்நிலையில் பெண்களுக்கான உருளை தடி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான்  16.02 மீட்டர் தூரம் எறிந்து  தங்கப் பரிசு வென்றார்.
 
மற்றொரு துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில்
இந்திய வீரர் மனிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்றார்.
 
மேலும் ஆண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தாகுர் நாராயண் 14.02 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
 
இதுவரை நடந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தமாக 28 பதக்கங்கள் வென்று 9 வது இடத்தில் உள்ளது.
 
சீனா 78 தங்கம் ,34 வெள்ளி,29 வெண்கலத்துடன் 141 பதக்கங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளது . 
 
நம் தமிழ்நாட்டின் சார்பில் மாரியப்பன் கலந்து கொண்டு இந்தியாவின் கொடியை தொடக்க நாளில் ,ஏற்றிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்