ரோகித் ஷர்மாவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் மயங்க்!

திங்கள், 18 நவம்பர் 2019 (13:05 IST)
சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் அதிக ரன்கள், விக்கெட்டுகள் குவித்து முன்னனியில் உள்ளனர்.

இந்தியா – வங்கதேச முதலாவது டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். இதனால் ஐசிசி தரவரிசை பட்டியலில் அவரது புள்ளிகள் உயர்ந்துள்ளன. இதுவரை 18வது இடத்தில் இருந்த மயங்க் 7 இடங்கள் உயர்ந்து 11வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடரும் போட்டிகளில் இதே போல விளையாட்டில் அதிரடி காட்டினால் முதல் 10 இடங்களில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா 10வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சிறந்த பத்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் 15வது இடத்தில் இருந்த முகமது ஷமி வங்கதேச டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நேரடியாக டாப் 10 பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலை வெளியிட்டுள்ள ஐசிசி வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்