நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த சிஎஸ்கே வீரர்
வியாழன், 22 மார்ச் 2018 (21:31 IST)
இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் சமிபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார் . ஏலம் எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழில் டுவீட் செய்து அசத்திய ஹர்பஜன் இன்று சிஏஸ்கே அறிமுக விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்
ஹர்பஜன் சென்னை வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை தமிழில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டதுதான். அதில் 'கபாலி' படத்தில் ரஜினி பேசும் வசனமான நான் வந்துட்டேன்னு சொல்லு' என்று ஆரம்பித்து டுவீட் செய்துள்ளார். அவரது டுவீட் இதுதான்:
நான் வந்துட்டேன்னு சொல்லு
தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.
மேலும் ஹர்பஜன் சிங் பதிவு செய்த இன்னொரு டுவிட்டில் அவர் பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியின் படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 27 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.