மகளிர் ஐபிஎல்: குஜராத் அணிக்கு 2வது வெற்றி.. உபியை வீழ்த்தியது..!

Siva

செவ்வாய், 12 மார்ச் 2024 (09:31 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி உத்தரபிரதேச அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது என்பதும் கேப்டன் பெத் மூனி அபாரமாக விளையாடி 74 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய உத்தர பிரதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் தீப்தி சர்மா மட்டுமே கடைசிவரை போராடி 88 ரன்கள் எடுத்த போதிலும் தனது அணிக்கு அவர் வெற்றியை தேடி தர முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குஜராத் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த போதிலும் புள்ளி பட்டியலில் இன்னும் நான்கு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் தான் உள்ளது .டெல்லி மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்