கோலி இப்போது அபாயகரமானவராக இருப்பார்… முதல் முறையாக பாராட்டிய கம்பீர்!

புதன், 15 டிசம்பர் 2021 (11:00 IST)
கேப்டன்சி சுமை இல்லாததால் கோலி இனி எதிரணிக்கு அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் விராட் கோலியும் களத்தில் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். இதனால் தான் ஓய்வு பெற்ற பின்னரும் கம்பீர் கோலியின் கேப்டன்சி பற்றி விமர்சனங்களை வைத்து வந்தார். இந்நிலையில் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படதற்கு பின்னர் அவரின் பேட்டிங் கூடும் என கம்பீர் நேர்மறையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘கோலியின் கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் அவர் இனிமேல் எதிரணியினருக்கு மிகவும் அபாயகரமானவராக இருக்கப்போகிறார். வரும் காலங்களில் அவர் இந்தியாவைப் பெருமைப் படுத்தப் போகிறார். தொடர்ந்து ரன்கள் எடுக்கப்போகிறார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்