8வது புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்!
புதன், 22 டிசம்பர் 2021 (10:39 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் புரோ கபடி போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் தலைவாஸ் உள்பட பல அணிகள் விளையாடும் புரோ கபடி லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய முதல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது கபடி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர். இந்த முறையாவது தமிழ்தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது