பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!

Prasanth Karthick

திங்கள், 10 ஜூன் 2024 (09:10 IST)
நேற்று நடந்த ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.



உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டிகளில் டென்னிஸ் போட்டி முக்கியமானது. பல நாடுகளில் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றாலும் பிரான்சில் நடைபெறும் ப்ரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் தனி கவனம் பெறுபவை.

அந்த வகையில் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடங்கி நடைபெற்ற நிலையில் நேற்று இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்கராஸும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வுடன் மோதினார். 5 சுற்றுகளாக நடந்த போட்டியில் 6-3, 2-6, 5-7, 6-1, மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் அல்காரஸ். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் அல்காரஸ் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

கோப்பையை கையில் ஏந்திய அல்காரஸ் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்