ஜெர்மனியில் எப்.எஸ்.வி மியூன்ஸ்டர் என்ற அணியில் விளையாடிய ஹெஸ்ஸி என்ற வீரர் விதிகளை மீறி விளையாடியதாகவும், சக வீரர்களை தாக்கியதாகவும் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்தார். மேலும் உடனே அவர் மைதானத்தில் இருந்து வெளியேற நடுவர் அறிவுறுத்தினார்
இதனை அடுத்து நிலைகுலைந்து விழுந்த நடுவரை மற்ற வீரர்கள் அரவணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட நிர்வாகிகள் ஹெஸ்ஸிக்கு மூன்று ஆண்டுகள் விளையாட தடை விதித்தனர். அது மட்டுமன்றி அவருடைய அணிக்கும் ஆறு மாதம் தடை விதித்து 553 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது