இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்ஷி. ஹரியானாவைச் சேர்ந்த டெனிஷ் அரோரா என்பவர், சாக்ஷி தோனி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லியில் உள்ள சுசந்த் லோக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த புகாரில் சாக்ஷி, ரிதி எம்.எஸ்.டி. அல்மோட் [Rhiti MSD Almode Pvt. Ltd] என்ற உடற்பயிற்சி நிறுவனத்தில் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருந்ததாகவும், இதில் சாஷிக் டோனி, அருன் பாண்டே, சுபவதி பாண்டே, பிரதீமா பாண்டே ஆகியோர் பங்குதார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாண்டே கூறுகையில், தோனியின் மனைவியான சாஷி இந்நிறுவனத்தின் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்வது இயலாது என்று கூறியுள்ளார். இது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.