FIFA உலகக்கோப்பை கால்பந்து : கானாவை வீழ்த்தி உருகுவே வெற்றி

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:18 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கானாவை வீழ்த்தி உருகுவே வெற்றி பெற்றுள்ளது.

ஃபிஃபா 22 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இத்தொடரில், ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள கானா மற்றும் உருகுவே ஆகிய இரண்டு அணிகளும் மோதின.

இதில், உருகுவே நாட்டைச் சேர்ந்த ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதையடுத்து, 32 வது நிமிடத்தில் அர்ராஸ்கேட்டா 2 வது கோல் அடிக்க வெற்றி உறுதியானது.

ALSO READ: FIFA உலகக் கோப்பை : ஸ்பெயின்- ஜெர்மன் இடையேயான போட்டி சமன்!
 
கானா அணியினரால் ஒரு கோல் அடிக்கமுடியவில்லை. எனவே, உருகுவே அணி 2-0 என்ற கோல்கணக்கில் கானாவை வீழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்