ஆனால் இப்போது சச்சின் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகப் பேசியுள்ள நிலையில் பலரும் சச்சினை விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதில் சிலர் சச்சினை நீங்கள் தெரித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்போது உங்களுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டோம். இப்போது அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். என்றவாறு கூறி வருகின்றனர்.