இதில் மேற்கிந்திய தீவுகளின் ஹோல்டர் மற்றும் கேப்ரியலின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 67.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், பட்லர் 35 ரன்களும், பெஸ் 31 ரன்களும் பர்ன்ஸ் 30 ரன்கள் எடுத்தார்கள். மேற்கிந்திய தரப்பில் ஹோல்டர் மற்றும் கேப்ரியல் தலா 6 விக்கெட்டுகளையும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. அந்த அணியின் கேம்ப்பெல் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஆண்டர்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். தொடக்க ஆட்டக்காரர் பிரெத்வெயிட் 20 ரன்களுடனும், ஹோப் 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.