இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட்: கும்ப்ளேவின் பதவி??
திங்கள், 13 மார்ச் 2017 (12:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார்.
இந்நிலையில் ராகுல் டிராவிட் அடுத்து இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவுக்கு ராகுல் டிராவிட்டும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேவுக்கு இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.