இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து கிட்டத்தட்ட 20 ரன்கள் குறைவாக எடுக்க காரணமாக இருந்தார். இதனால் நேற்றைய தோல்விக்கு தோனிதான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் முன்னாள் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா தோனி பார்முக்கு வரவேண்டும் என முயல்கிறார். ஆனால் அவரின் பேட்டிங் மந்தமாக உள்ளது. பந்து பேட்டில் பட்டாலே திருப்தி அடைகிறார். அவருக்கு முன்னதாக ஜடேஜாவை இறக்கவேண்டும். ஏனென்றால் அவர் இப்போது பார்மில் உள்ளார். டெத் ஓவர்கள் இப்போது அவர் கையில்தான் உள்ளது எனக் கூறியுள்ளது.