யாருமே என் பேரை சொல்ல மாட்டேங்குறாங்க: தமிழ் ரசிகர்களை செல்லமாக கோபித்த தோனி!

புதன், 4 மார்ச் 2020 (20:46 IST)
யாருமே என் பேரை சொல்ல மாட்டேங்குறாங்க
தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைவரும் தன்னை யாருமே பெயரைச் சொல்லி அழைப்பதில்லை என்றும், தல என்று அன்புடனே அழைப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகழ்ச்சியாகவும் செல்லமாக கோபித்தும் தெரிவித்துள்ளார் 
 
13வது ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை அடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தல தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியின்போது பேட்டி அளித்த தோனி ’தன்னை தமிழக ரசிகர்கள் உள்பட அனைவரும் தன்னை தல என்று தான் அழைத்து வருகிறார்கள் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.
 
தல என்றால் சகோதரன் என்று நான் எடுத்துக் கொள்கிறேன் என்றும், அந்தப் பெயர்தான் எனக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்தது என்றும், எப்பொழுதெல்லாம் நான் சென்னை வருகின்றேனோ அப்பொழுதெல்லாம் ரசிகர்கள் என்னை தல என்று அழைக்கிறார்கள், யாரும் என்னுடைய பெயரை சொல் அழைப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். தல தோனியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்