ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பெற காரணமாக இருந்தவர். வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் கே எல் ராகுல் 5 ஆவது இடத்தில் இறங்கி 52 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்ட கே எல் ராகுலுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.
நடுவரிசையில் இறங்குவது குறித்து பேசும்போது ‘நடுவரிசையில் சிறப்பாக விளையாட நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும ஆஸியின் ஸ்மித் ஆகியோரின் வீடியோக்காளைப் போட்டு பார்த்தேன்.’ என ராகுல் கூறினார்.ராகுலின் இந்த பேச்சு தோனி ரசிகர்களைக் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. ராகுலிடம் ‘உலகிலேயே சிறந்த நடுவரிசை ஆட்டக்காரர் எனப் பெயர் பெற்ற தோனியின் வீடியோவை ஏன் பார்க்கவில்லை’ என ரசிகர்கள் அவருக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.