டி20 போட்டி களத்தில் இதுவரை செய்யாத ஒன்றை செய்த தோனி!!

வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:45 IST)
இங்கிலாந்து அணிக்லு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். 


 
 
இந்தியா - இங்கிலாந்து மோதிய மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 அரங்கில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
 
தோனி 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வரும் தோனி, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து தனது 76 வது போட்டியில் முதல் அரை சதத்தினை பதிவு செய்துள்ளார்.
 
மேலும், டி20 அரங்கில் அரை சதத்தை பதிவு செய்ய அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 
 
இதற்கு முன்பு அயர்லாந்தைச் சேர்ந்த வீரர் கேரி வில்சன் 42வது போட்டியில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்