இந்திய நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்: டேவிட் வார்னர்

திங்கள், 24 அக்டோபர் 2022 (16:18 IST)
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் பல கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்களும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறுவதை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய நண்பர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் உங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் சிறப்பாக அமையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனையடுத்து இந்தியர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்