ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி!

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:56 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு பாக் கிரிக்கெட் வீரர் டேனிஷ கனேரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அதையடுத்து அயோத்தியில்ல் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் இந்தியாவில் அரசியல் ரீதியாக ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் சம்மந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ‘ராமரின் மகத்துவம் அவர் பெயரில் இல்லை. குணாதிசயத்தில் உள்ளது. தீமையை வென்றதற்கான அடையாளம் அவர். இந்த செய்தியானது உலகம் முழுவதும் மகிழ்ச்சி அலை வீசச்செய்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

முன்னதாக கனேரியா தான் ஒரு இந்து என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் தன்னிடம் வேற்றுமை பாராட்டி தன்னுடன் ஒன்றாக அமர்ந்து கூட சாப்பிட மறுத்தனர் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்