இதனையடுத்து களமிறங்கிய ஜடேஜா ஆரம்பத்தில் நிதானமாக விளைந்தாலும் கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். ஹர்ஷல் பட்டேல் வீசிய ஓவரில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு இரண்டு ரன்கள் எடுத்தார் என்பதும் அந்த ஓவரில் ஒரு நோபால் வீசப்பட்டதால் 20 ஆவது ஓவரில் மட்டும் மொத்தம் 37 ரன்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது