கோவை உருமாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா ராணி,மாற்றுத் திறனாளியான தீபீகா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந் நிலையி்ல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம் பேசினார்.
சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர்,உலக தரவரிசையில் 49 வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
இது போன்று பல திறமையான வீர்ர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவநாக கூறிய அவர்,சரியான தகவல்களை மத்திய மாநில விளையாட்டு ஆணையங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர்,பல திறமையான வீரர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார்.