உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விஹாரியை சேர்த்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அணி தேர்வு என்பது போட்டில் சூழ்நிலையை பொறுத்து மாறுமாடும். குறிப்பாக விஹாரியின் தேர்வு செய்தது அவர் ஒரு நடுகள ஆட்டக்காரர் மற்றும் ஒரு பந்துவீச்சாளர். அதனால் போட்டியில் அவர் பந்துவீசுவார். அதன் பொருட்டுதான் அவரை தேர்வு செய்தோம். அணியின் கேப்டனாக சில முடிவுகளை நான் எடுக்கிறேன்.ஆனால் அதில் வெற்றி என்பது அனைத்து வீரர்களையும் சார்ந்தது. அதனால் வெற்றி பெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். என்று தெரிவித்தார்.
மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய பின்னர், ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் வீராட் கோலி ஆகியோரிடையே மோதல் வலுத்ததாக தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் விராட்டின் மனைவி அனுஷ்கா சர்மா சில கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.