விராட் கோஹ்லியை தொடாமலே இந்தியாவை வீழ்த்துவோம்; இங்கிலாந்து பயிற்சியாளர்

திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (16:39 IST)
இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் விராட் கோஹ்லிக்கு நெருக்கடியை உண்டாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளதாவது:-
 
விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இல்லை. அந்த நிலையை நெருங்கி வருகிறார். இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோஹ்லி விளையாடியது உயர்தர ஆட்டம். இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தால், அது விராட் கோஹ்லியிடம் சென்று அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்