சம்பள உயர்வு கேட்ட கும்ப்ளே பதவிக்கு ஆபத்து: பிசிசிஐ அதிரடி!!

வெள்ளி, 26 மே 2017 (12:26 IST)
இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அப்பணியில் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


 
 
அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் வரும் சாம்பியன்ஸ் லீக் தொடருடன் முடிவடைகிறது. இருப்பினும் கும்ப்ளே பதவிக் காலத்தை நீடிக்காத இந்திய கிரிக்கெட் வாரியம், புதிய பயிற்சியாளருக்கான தேடலில் உள்ளது. 
 
பயிற்சியாளர் கும்ப்ளேவும் மீண்டும் இதில் போட்டியிடலாம் என பிசிசிஐ கூறியுள்ளது. சச்சின், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, நேர்முக தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும். 
 
கோலி மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு 150 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு கும்ப்ளே ஆதரவு தெரிவித்தார். இதனால் இவ்வாறு நடக்கிறது என்று பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்