வரலாற்று சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்...?

திங்கள், 14 ஜனவரி 2019 (07:46 IST)
2019ம்  ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று  தொடங்குகிறது. இதில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று உலக சாதனையை படைப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 
சர்வதேச டென்னிஸ் நாயகியான செரீனா வில்லியம்ஸ், சிறிய இடைவேளைக்கு பிறகு, ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடும் நிலையில், மகளிர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் சரித்திர சாதனையை சமன் செய்ய தயாராகி வருகிறார். 
 
உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பார்க்கப்படுகிறார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, மகளிர் ஒற்றையர் பிரிவில் சரித்திர சாதனை படைத்த மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றபோது, ஸ்டெக்பி கிராபின் (22 பட்டங்கள்) சாதனையை செரீனா முறியடித்தார். 
 
37 வயதான வில்லியம்ஸ், கடைசியாக செப்டம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் இறுதி போட்டியில், சர்ச்சைக்குரிய முறையில் நடுவரிடம் சண்டையிட்டு வெளியேறினார். அதன் பிறகு, தற்போது தான் டென்னிஸ் களத்திற்கு வில்லியம்ஸ் திரும்பியுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 16வது இடத்தில செரீனா இருந்தாலும், மற்ற டாப் வீராங்கனைகள் அவரை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றே தெரிவித்துள்ளர். "இதுபோன்ற தரவரிசையை வைத்து செரீனாவை ஒதுக்கிவிட முடியாது. இந்த தொடரில் அவர் மிக பலமாக களமிறங்குவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஒசாகா.
 
இதனால் செரீனா இந்த ஆண்டில்  24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்