ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர், கேப்டன் பின்ச், காவாஜா, மேக்ஸ்வெல், ஸோனிஸ் ஆகிய ஐந்து பேர் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் அந்த அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இந்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் நிதானமாக ரன்களை குவித்து 103 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார்.
ஸ்மித் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய நைல் தனது அதிரடியை தொடங்கினார். மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்களை அவர் பவுண்டரிகள்,, மற்றும் சிக்ஸருமாக விளாசியதால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.