கோலியிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அஞ்சுவது ஏன்? மைக்கேல் கிளார்க் கருத்து!

புதன், 8 ஏப்ரல் 2020 (07:59 IST)
ஆஸி அணியினர் கோலி மற்றும் இந்திய வீரர்களுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாததற்குக் காரணம் ஐபிஎல் தொடர்தான் என ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் உள்ள கிரிக்கெட் அணிகளில் ஸ்லெட்ஜிங்கிற்குப் பெயர் போனவர்கள் ஆஸி கிரிக்கெட் வீரர்கள். ஆனால் அந்த அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் மற்றும் பிரட்லி போன்ற வீரர்கள் ஓய்வு அறிவித்த பின்னர் இப்போது ஆஸீ வீரர்கள் அடக்கி வாசித்து வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக தற்போது பிசிசிஐ இருந்து வருகிறது. அவர்கள் நடத்தும் ஐபிஎல் தொடர் பணம் கொழிக்கும் தொழிலாக இருந்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட எல்லா அணிகளும் அவர்களிடம் பணிந்தன. கோலியுடனோ மற்ற இந்திய வீரர்கள் உடனோ ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட பயந்தனர்.

வழக்கமாக ஆக்ரோஷமாக இருக்கும் வீரர்கள் கூர கோலியுடன் ஐபிஎல் விளையாடி பல கோடிகளை ஆறே வாரங்களில் சம்பாதிக்கவேண்டும் என மனக்கணக்கு போட்டனர். இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் வழக்கமான ஆக்ரோஷம் காணப்படவில்லை.’ என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்